சௌதி அரேபியாவிற்குத் துருக்கி அரசுத் தலைவர் பயணம்
2022-04-29 16:15:57

சௌதி அரேபியாவில் 2 நாள் பயணமாக, துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன் ஏப்ரல் 28ஆம் நாள் சௌதி அரேபியாவைச் சென்றடைந்தார். கடந்த 5 ஆண்டுகளில் எர்டோகன் முதல்முறையாக சௌதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டப்படி, இப்பயணத்தில், சௌதி அரேபிய மன்னர் மற்றும் பட்டத்து இளவரசர் முதலியோருடன் எர்டோகன் சந்தித்து, இரு தரப்புறவு குறித்து விவாதித்து வருகிறார்.