75 சதவீத அமெரிக்க குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நோய்தொற்று
2022-04-29 09:46:20

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 26ஆம் நாள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, இவ்வாண்டு பிப்ரவரி வரை, 75 சதவீத அமெரிக்க குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இரத்தத்தில் கரோனா வைரஸுக்கான எதிரணு கண்டறியப்பட்டது. இவர்களுக்கு கோவிட்-19 நோய் தொற்று ஏற்பட்டிருந்ததை, இது காட்டுகிறது.

2021ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரை, அமெரிக்காவில் குழந்தைகளும் இளைஞர்களும் இந்நோய் தொற்றினால் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்குத் தடுப்பூசி போடும் விகிதம் மிக குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 நோய் பரவத் தொடங்கியது முதல் இதுவரை, அமெரிக்காவில் மொத்தம் 1 கோடியே 29 இலட்சம் குழந்தைகளுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.