சீனப் பொருட்கள் மீதான கூடுதலான சுங்க வரி நீக்கம் பற்றி அமெரிக்காவின் ஆய்வு
2022-04-29 16:56:14

அமெரிக்கா ஒருசார்பாக கூடுதலான சுங்க வரி வசூலிப்பது போன்ற நடவடிக்கைகள், சீனா, அமெரிக்கா மற்றும் உலகிற்கு துணைபுரியவில்லை. தற்போதைய பணவீக்கம் உயர்வு சூழலில், சீனப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதலான சுங்க வரியை அமெரிக்கா நீக்கினால், இது அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் நுகர்வோரின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியதாக உள்ளது என்று சீன வணிக அமைச்சகம் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தது.

அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் எலன் அண்மையில் பேசுகையில் பணவீக்கத்தைச் சமாளிக்க அமெரிக்க அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக, சீனப் பொருட்கள் மீதான சுங்க வரியை குறைப்பதைக் கருத்தில் கொள்ளத்தக்கது என்று தெரிவித்தார். இந்த தகவலுக்கு பதில் அளிக்கையில், சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ்ஃபெங் மேற்கூறிய கருத்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், சீன மற்றும் அமெரிக்க பொருளாதார வர்த்தக குழுக்களும் இயல்பாக தொடர்புகளைக் கொண்டு வருகின்றன என்றும் காவ்ஃபெங் குறிப்பிட்டார்.