அமெரிக்காவில் காட்டுக் குதிரைகளுக்கு அறியப்படாத நோய் தொற்று
2022-04-29 16:52:24

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் கனான் நகரத்திலுள்ள புல்வெளி பகுதி ஒன்றில் 67 காட்டுக் குதிரைகள் ஒரு வாரத்துக்குள் மிகவும் பரவக் கூடிய அறியப்படாத தொற்று நோயினால் உயிரிழந்தன என்று அமெரிக்க நிலங்கள் மேலாண்மை வாரியம் 27ஆம் நாள் உறுதி செய்துள்ளது.

அங்கு, 2500க்கும் அதிகமான விலங்குகள் உள்ளன. தொற்று நோய் ஏற்பட்ட பிறகு, நோய் பாதிக்குள்ளளான விலங்குகள், தொற்று இடர்பாடு உடைய விலங்குகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளளது.