ஸெலென்ஸ்கி-குட்ரேஸ் சந்திப்பு
2022-04-29 09:58:55

ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸுடன் கீவு நகரில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியதாக உக்ரைன் அரசுத் தலைவர் ஸெலென்ஸ்கி உள்ளூர் நேரப்படி 28ஆம் நாள் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தைக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறுகையில், மாலிவுபோலிலுள்ள யாசு இருப்புருக்குத் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றுவது பற்றி அவசரப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உக்ரைன் தயாராக உள்ளது என்று தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இதற்காக உக்ரைன் அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.