சீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி பற்றிய ஷி ச்சின்பிங்கின் கட்டுரை
2022-04-30 17:40:49

அறிவியல் தொழில் நுட்ப வல்லரசை விரைவாக கட்டியமைப்பது, உயர் நிலை அறிவியல் தொழில் நுட்ப சுதந்திரத்தை நனவாக்குவது என்ற தலைப்பில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமை செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுத்திய கட்டுரை, மே முதல் நாள் வெளியாகும் ஜியு ஷி என்ற இதழில் வெளியிடப்படவுள்ளது.

அறிவியல் தொழில் நுட்ப இலட்சியம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொது மக்களின் இலட்சியத்தில் எப்போதுமே மிக முக்கியமான நெடுநோக்கு தகுநிலையைக் கொண்டு, மிக முக்கியமான பங்கு ஆற்றி வருகின்றது என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா அறிவியல் தொழில் நுட்ப அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை முன்னேற்றி, பன்முக புதுப்பிப்புக்கு ஆதரவு அளிக்கும் அடிப்படை அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.