இலங்கையில் வெளிநாட்டு நாணய வருவாய் – விதிமுறைகள் மாற்றம்
2022-04-30 16:44:25

இலங்கையில் ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு நாணய வருவாயை இலங்கை ரூபாயாக மாற்றுவதில் உள்ள விதிமுறைகளை விரைவில் நீக்க உள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற சேவைத் துறையிலான ஏற்றுமதிகளில் இருக்கும் கட்டாய நாணய மாற்று விதிமுறைகள் நீக்கப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் வீரசிங்கே தெரிவித்துள்ளார்.

இத்தகைய சேவைகளைக் கண்காணிக்க இயலாது என்றும் கட்டாய மாற்று விதிமுறைகளால் சில ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு நாணய வருவாயைக் கொண்டு வருவதில்லை என்றும் அவர் தெரவித்தார்.

மேலும், சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் டாலரைப் பயன்படுத்தும் விதிமுறையையும் தளர்த்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக வங்கி அறிவித்துள்ளது.