சீன-நார்வே தலைமை அமைச்சர்களின் தொலைபேசி தொடர்பு
2022-04-30 17:03:33

சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் ஏப்ரல் 29ஆம் நாள் பிற்பகல் அழைப்பின் பேரில் நார்வே தலைமை அமைச்சர் ஜோனஸ் காஹ்ர் ஸ்டோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

லீ கெச்சியாங் கூறுகையில், நார்வே, வட ஐரோப்பாவில் சீனாவின் முக்கிய ஒத்துழைப்பு கூட்டாளியாகும். இருநாட்டுறவுக்கு ஆழ்ந்த அடிப்படை உண்டு என்று தெரிவித்தார். மேலும், நார்வேயுடன் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து ஒன்றுடன் ஒன்று சமமாக பழகி, இருதரப்பு உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது. பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், காலநிலை மாற்றச் சமாளிப்பு, பசுமை தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நார்வேயுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், நார்வேயிலிருந்து வேளாண் மற்றும் மீன்பிடித் துறையின் பொருட்களை மேலதிகமாக இறக்குமதி செய்யவும், நோய் தொற்று தடுப்பு, உலக சுகாதார ஒத்துழைப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பவையில் பலதரப்பு பரிமாற்றத்தை வலுப்படுத்தவும் சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உக்ரைன் நிலைமை பற்றி அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சீனாவின் கோட்பாடு மற்றும் நிலைப்பாடு பற்றி லீ கெச்சியாங் விளக்கிக் கூறினார்.