கொவைட்-19 பாதிப்பு : பொருளாதார இழப்பை ஈடுசெய்ய 10 ஆண்டுகள்
2022-04-30 16:46:33

இந்தியாவில் கொவைட்-19 ஏற்படுத்திய பொருளாதார இழப்புகளை சரி செய்ய 10 ஆண்டுகள் அல்லது சுமார் 15 ஆண்டுகள் தேவைப்படும் என்று மத்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பொருளாதாரம் தற்போது மீட்சி அடைந்து வரும் போதிலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டின்படி, 2020-21 நிதியாண்டில் 2,500 கோடி டாலரும், 2021-21இல் 2,230 கோடி டாலரும், 2022-23இல் 2,140 கோடி டாலரும் இருக்கும் என்று நாணய மற்றும் நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதார வளர்ச்சியானது 2020-21இல் பூஜியத்துக்குக் கீழ் 6.6 விழுக்காடுமாகவும், 2021-22இல் 8.9 விழுக்காடுமாகவும் இருந்தது. நடப்பு நிதியாண்டில் 7.2 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொள்கையில், கொவைட்-19 ஏற்படுத்திய இழப்புகளை ஈடு செய்வதற்கு 10 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலுவான மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு, விலைவாசியின் நிலைத்தன்மை மிக முக்கியமானது. அத்துடன், பொருளாதாரத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக 7 ஆலோசனைகளும் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.