அமெரிக்காவில் கொவைட்-19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
2022-05-01 18:09:00

அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி நிறுவனம் ஏப்ரல் 30ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, அமெரிக்காவிலுள்ள கரோனா வைரஸ் பரவல் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகின்றது. கடந்த இரு வாரங்களில், அமெரிக்காவில் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 விழுக்காடு அதிகரித்தது. மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 விழுக்காடு அதிகரித்துள்ளது. இப்போது சுமார் 43 விழுக்காட்டு அமெரிக்கர்கள், கரோனா வைரஸ் மோசமாகப் பரவி வரும் பகுதிகளில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிட்த்தக்கது.