பிரச்னைகளுக்கு பல்வேறு அணுகுமுறைகளில் தீர்வு – இலங்கை தலைவர்கள்
2022-05-01 17:17:43

இலங்கையில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு வெவ்வேறு அணுகுமுறைகளின் மூலம் தீர்வு காணப்படும் என்று அரசுத் தலைவர், தலைமை அமைச்சர் ஆகியோர் சர்வதேச உழைப்பாளர் தின வாழ்த்துச் செய்திகளில் தெரிவித்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக அதிக அறைகூவல்களை எதிர்கொண்டவர்கள்  உழைக்கும் வர்க்கத்தினர்தான். அவர்கள், தினசரி வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்னைகள் தற்போது மேலும் கடுமையாக மாறியுள்ளன என்று அரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்.

பிரச்னைகளிலிருந்து மீண்டு வரும் விதம் மக்களின் சார்பாக அனைத்துக் கட்சிகளும் ஓர் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் விதம் உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் ஆதரவை நாடி வருகிறோம் என்று தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்.