சீனப் பொருளாதார நிலைமை மற்றும் வளர்ச்சி பற்றிய நிபுணரின் கருத்து
2022-05-01 17:35:29

தற்போது சீனப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சூழ்நிலையில் சிக்கலான மற்றும் உறுதியற்ற தன்மை அதிகரித்து வருகிறது. வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் விலைவாசியை நிலைநிறுத்துவதில் புதிய அறைகூவல்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைமைச் செயலாளர் சாவ் சென்சின் கூறுகையில், இத்தகைய இன்னல்கள் மற்றும் அறைகூவல்களை எதிர்கொண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும் சீன அரசவையும் தெளிவான ஏற்பாடுகளை செய்துள்ளன. குறிப்பாக நோய் தொற்று பரவலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தொழில்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பல ஆதரவுக் கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் அதிக வளர்ச்சி மற்றும் வணிக வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டார். மேலும், சீனப் பொருளாதாரம் தொடர்ந்து மீட்சி அடைந்து வளர்ச்சி காணும் சீரான போக்கு மாறாது. உயர்தர வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் உற்பத்திக் காரணிகளும் மாறாது. பொருளாதாரத்தின் வலுவான நெகிழ்வுத்தன்மை மற்றும் பெரும் உள்ளார்ந்த ஆற்றலும், நீண்டகாலத்துக்கு சீராக வளரும் அடிப்படையும் மாறாது. முழு ஆண்டிற்கான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி இலக்கை நனவாக்க, சீனாவுக்கு நம்பிக்கை, திறமை மற்றும் உரிய சூழலும் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.