திபெத் புத்தமதக் கழகம்
2022-05-01 16:32:24

திபெத் புத்தமதக் கழகம், திபெத்தின் லாசா நகரின் ச்சூஷுய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திபெத்தில் முதலாவது உயர் நிலை திபெத் மரபுவழி புத்தமதக் கழகம் இதுவாகும். இங்கு, நவீனக் கல்வி வழிமுறையையும் பாரம்பரிய கல்வி வழிமுறையையும் இணைத்து புத்தமதம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. திபெத் மரபுவழி புத்தமத்தைச் சேர்ந்த 5 பிரிவுகளின் மூத்த மத குருமார்களும், மாணவர்களும் இக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது மொத்தம் 900க்கும் மேலானோர் இக்கழகத்தில் கற்று வருகின்றனர்.