தாங்கா கலை ஓவியர்
2022-05-01 16:30:52

ஓவியக் கலைஞர் ஜியாங்யொங், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தாங்கா கலை மற்றும் பண்பாட்டுச் சங்கத்தின் துணைத் தலைவராவர். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, நேபாளம், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அவர் கலைக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். கடந்த 20க்கும் மேலான ஆண்டுகளாக திபெத்தில் படைப்புக்கான புத்துணர்வு பெற்றுள்ள அவர், நவீனப் பாணியை பாரம்பரிய ஓவியத்தில் சேர்த்து, தனிச்சிறப்புடைய கலையை உருவாக்கியுள்ளார்.