கராச்சி பல்கலைக்கழக வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு நிவாரண நிதி
2022-05-01 17:24:51

கராச்சி பல்கலைக்கழகத்தின் பள்ளி வாகனம் பயங்கரத் தாக்குதலுக்குள்ளான சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும், நிவாரணப் பணியை மேற்கொண்டு வரும் கராச்சி பல்கலைக்கழகத்தின் கன்பியூஷியஸ் கழகத்துக்கும் உதவியளிக்கும் விதம், 5 லட்சம் யுவானுடன் சிறப்பு நிவாரண நிதியை உருவாக்குவதாக, கன்பியூஷியஸ் கழகம் என்ற சின்னத்தை நிர்வகிக்கும் சீனச் சர்வதேச சீன மொழி கல்வி நிதியம் ஏப்ரல் 30ஆம் நாள் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் நிறுவனங்களும் நன்கொடை வழங்கும் விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் இந்நிதியம் கூறியுள்ளது.