தேசிய இருப்புப்பாதையின் போக்குவரத்து வளர்ச்சி
2022-05-01 16:16:36

சீனத் தேசிய இருப்புப்பாதை குழும நிறுவனத்தின் தகவலின்படி, ஏப்ரல் திங்களில் தேசிய இருப்புப்பாதை மூலம் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளின் எடை 33 கோடி டன்னை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 10.1 விழுக்காடு அதிகரித்தது. மேலும், தனியொரு திங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளின் அளவு, நாளுக்கு சராசரியாக இயங்கிய தொடர்வண்டிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல குறியீடுகள் வரலாறு காணாத புதிய உயர் பதிவுகளை உருவாக்கி, வலுவான வளர்ச்சிப் போக்கினை வெளிக்காட்டியுள்ளன.