சீன எண்ணியல் மற்றும் பசுமை பொருளாதாரம் மீது வெளிநாட்டு நிபுணரின் நம்பிக்கை
2022-05-02 17:30:45

ஜெர்மன் ஃபாரன்க்போர்ட் நிதி மற்றும் நிர்வாகக் கழகத்தின் பேராசிரியர் ஹோஸ்ட் லெஷேல் சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,

பெரும் நுகர்வுத் திறன் கொண்ட சீனச் சந்தை அன்னிய முதலீட்டுக்கு ஈர்ப்பாற்றல் மிக்கது. கோவைட் 19 நோய் தொற்று பாதிப்பு இருந்த போதிலும், சீன பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்பு மீது குறிப்பாக சீனாவின் எண்ணியல் பொருளாதாரம் மற்றும் பசுமை பொருளாதாரம் மீது அன்னிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றார்.