உக்ரைனின் மீதான ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை
2022-05-02 16:11:43

மே 9ஆம் நாள், ரஷியாவின் தேசிய பாதுகாப்பு போருக்கான நினைவு நாளுக்கு முன், உக்ரைனின் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையை நோக்கத்துடன் நிறுத்தாது என்று ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் மே முதல் நாள் தெரிவித்தார்.

மரியுபொல் நகரிலுள்ள அசோவ் இரும்புருக்கு தொழிற்சாலையிலுள்ள பொது மக்களின் வெளியேற்றம் மே முதல் நாள் தொடங்கியது. முதல் தொகுதியான 100 பேர் சபோரோட்ஜேயி நகருக்கு கொண்டு செல்லப்படுவர் என்று உக்ரைன் அரசுத் தலைவர் செலன்ஸ்கி மே முதல் நாள் தெரிவித்தார்.