கியூபாவில் சர்வதேச உழைப்பாளர் தினப் பேரணிகள்
2022-05-02 16:13:18

கியூபாவின் பல்வேறு இடங்களில் சர்வதேச உழைப்பாளர் தினப் பேரணிகள் மே முதல் நாள் நடைபெற்றன. லட்சக்கணக்கான மக்கள் சாலையில் ஒன்றுகூடி, கியூபாவின் மீதான அமெரிக்காவின் முற்றுகையை எதிர்த்துடன், நாட்டுப்பற்று உணர்வையும் வெளிப்படுத்தினர். அத்துடன், கியூபாவின் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்களுக்கு அவர்கள் மதிப்பு அளித்தனர். கியூபாவின் தொழிலாளர்கள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் குயிலார்டே நிகழ்த்திய உரையில், கியூபாவின் மீதான அமெரிக்காவின் நீண்டகால முற்றுகை, கியூபா வளர்ச்சிக்கு இருக்கும் முக்கியத் தடையாகும். தடை நடவடிக்கையின் மூலம், கியூபாவைப் பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள முயன்று வருகிறது. சோஷலிசக் கட்டுமானத்தின் மீதான கியூபா மக்களின் நம்பிக்கை மற்றும் வாக்குறுதியை இந்தப் பேரணி வெளிப்படுத்தியது என்று தெரிவித்தார்.