சீனாவின் ஜொல்மோ லுங்மா சிகரத்தில் ஏறும் நடவடிக்கை துவக்கம்
2022-05-02 17:06:51

ஜொல்மோ லுங்மா சிகரத்துக்கான சீனாவின் புதிய அறிவியல் ஆய்வு நடவடிக்கையைச் சேர்ந்த சிகரத்தில் ஏறும் நடவடிக்கை மே 2ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. 14 பணியாளர்கள் பல்வேறு சாதனங்களுடன் இன்று பிற்பகல் 2 மணி அளவில் கடல் மட்டத்திலிருந்து 6500 மீட்டர் உயரத்தில் உள்ள முகாமிலிருந்து புறப்பட்டனர். இன்றிரவு 7028 மீட்டர் உயரத்தில் உள்ள முகாமைச் சென்றடைவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மே 4ஆம் நாள் இச்சிகரம் ஏற்றத்துக்கான ஆயத்தப் பணிகளை அங்கே அவர்கள் மேற்கொள்வார்கள்.