ஆப்பிரிக்காவின் நெருக்கடியை ரஷிய-உக்ரைன் மோதல் தீவிரமாக்கியுள்ளது:குட்ரெஸ்
2022-05-02 16:05:53

ஐ.நா. தலைமைச் செயலாளர் குட்ரெஸ் மே முதல் நாள் செனகல் அரசுத் தலைவருடன் இணைந்து அந்நாட்டின் தலைநகர் தக்காரில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ரஷிய-உக்ரைன் மோதல் வளரும் நாடுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, முழு ஆப்பிரிக்காவிலும் உணவு, எரியாற்றல் மற்றும் நிதியுடன் தொடர்புடைய மூன்று நெருக்கடிகளைத் தீவிரமாக்கியுள்ளது. இதன் விளைவாக, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் நிலையற்ற அரசியல் நிலைமை மற்றும் சமூகப் பதற்றம் ஏற்படக் கூடும் என்று குறிப்பிட்டார்.

ஆப்பிரிக்காவில் உணவு நெருக்கடியைச் சமாளிக்கும் விதம், தேவையற்ற ஏற்றுமதி தடைகள் அனைத்தையும் நீக்கி உணவுகளின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், புதுப்பிக்கவல்ல எரியாற்றலின் வளர்ச்சியை பல்வேறு நாடுகள் விரைவாக முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், உலகளாவிய உணவு, எரியாற்றல் மற்றும் நிதி நெருக்கடி சமாளிப்பு குழுவை ஐ.நா. உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.