சின்ஜியாங்கில் மே தின விடுமுறைக்கான பனி விளையாட்டுகள்
2022-05-03 16:41:13

30 கோடி பொது மக்கள் பனி விளையாட்டில் பங்கெடுக்க வைத்த சாதனையை வலுப்படுத்தி விரிவாக்கும் விதம், சீனத் தேசிய விளையாட்டு தலைமைப் பணியகத்தின் குளிர்கால விளையாட்டு நிர்வாக மையம் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் மே தின விடுமுறைக்கான பனி விளையாட்டுப் போட்டியை நடத்தி வருகிறது.

சின்ஜியாங், ஷான்சி உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த சுமார் 100 விளையாட்டு வீரர்கள், மே 1 முதல் 3ஆம் நாள் வரை நடைபெற்ற மலை பனிச்சறுக்கு மற்றும் ஆல்பைன் பனிச்சறுக்கு ஆகிய போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர். மே 5 முதல் 7ஆம் நாள் வரை நடைபெறும் கிராஸ் கன்ட்ரி(cross country) பனிச்சுறுக்கு போட்டியில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கெடுக்க உள்ளனர்.

பொது மக்கள் பனி விளையாட்டில் பங்கெடுக்கும் உற்சாகத்தை மேலும் ஊக்குவிக்கும் விதம், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளைப் புத்தாக்கம் செய்து, ஈர்ப்பற்றல் மிக்க பனி விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து வழங்கப்பட உள்ளன.