ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எரியாற்றல் அமைச்சர்களின் அவசரக் கூட்டம்
2022-05-03 16:48:31

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எரியாற்றல் அமைச்சர்கள் 2ஆம் நாள் பெல்ஜியத்தின் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினர். இக்கூட்டத்தில்,  ஐரோப்பிய ஒன்றியத்தின் எரியாற்றல் வினியோகத்துக்கு ரஷிய-உக்ரைன் நிலைமையின்  பாதிப்பை, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிவாயு வினியோகத்தை ரஷியா நிறுத்துவதை எப்படிச் சமாளிப்பது என்பதை அவர்கள் விவாதித்தனர்.

 ஐரோப்பிய ஒன்றியத்தின் எரியாற்றல் ஆணையர் காத்ரி செிம்சன் இக்கூட்டத்துக்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்,

இப்போது மூன்று பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். முதலில், புதிய நிலைமையின் படி, அவசர எரிவாயு வினியோக திட்டத்தை மேம்படுத்த வேண்டும். இரண்டாவது, அடுத்த குளிர்காலத்துக்கு முன் போதுமான அளவு எரிவாயுவை சேமிக்க வேண்டும். மூன்றாவது, ஐரோப்பிய ஒன்றிய எரியாற்றல் வினியோக மேடையின் மூலம், எரிவாயு வினியோக வழிமுறைகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.