பெய்ஜிங் பங்குச் சந்தையில் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் வருமானம் அதிகரிப்பு
2022-05-03 17:04:38

பெய்ஜிங் பங்குச் சந்தை மே 2ஆம் நாளிரவு வெளியிட்ட தகவலின் படி, 2021ஆம் ஆண்டில், இச்சந்தையில் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் மொத்த வருமானம் 6689 கோடி யுவானை எட்டியுள்ளது. அவற்றின் நிகர லாபம்,725 கோடி யுவானாகும். இவை 2020ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 31.1 23.8 விழுக்காடு அதிகரித்தன.

ஏப்ரல் 30ஆம் நாள் வரை, இப்பங்குச் சந்தையில் சேர்ந்துள்ள 89 தொழில் நிறுவனங்கள், 2021ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டன. இவற்றில் 88 தொழில் நிறுவனங்கள் லாபகரமாக இயங்கி உள்ளன.

சிக்கலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலைமை, பல்வேறு அறைகூவல்கள் ஆகியவற்றைச் சந்திக்கும் போதிலும், இத்தொழில் நிறுவனங்கள் நிதானமாகவும் சீராகவும் இயங்கி, நெகிழ்வுத்தன்மை மற்றும் உயிராற்றலை வெளிகாட்டியுள்ளன என்று பங்கு சந்தை பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.