26வது சீன இளைஞர்கள் விருதுக்கான தேர்வு
2022-05-03 16:28:20

சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் உருவாக்கப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, முன்மாதிரி இளைஞர்களின் பங்குகளை முழுமையாக வெளிக்கொணர்ந்து, பரந்துபட்ட இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டை வரவேற்கும் விதமாகவும், மா யூடிங் உள்ளிட்ட 49 பேருக்கும், ஷோவ்காங் குழுமத்தைச் சேர்ந்த பெய்ஜிங் குளிர்கால விளையாட்டுப் போட்டிக்கான இளைஞர் சேவை குழு உள்ளிட்ட 16 குழுக்களுக்கும், 26வது சீன இளைஞர்கள் விருதுகள் வழங்கப்படும் என்று சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்தியக்குழு மற்றும் அனைத்து சீன இளைஞர் சம்மேளனம் முடிவு செய்துள்ளன. மேலும், ஃபொங் ஷாவ்வெய் உள்ளிட்ட 73 பேரும், சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கூட்டு நிறுவனத்தின் 6வது ஆய்வு கழகத்தைச் சேர்ந்த 801 ஆய்வகத்தின் விண்வெளி உந்துவிசை அமைப்புப் பிரிவு உள்ளிட்ட 17 குழுக்களும்  26வது சீன இளைஞர்கள் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.