முதல் காலாண்டில் சீனாவின் பல்வேறு இடங்களின் பொருளாதார விவபரங்கள்
2022-05-04 16:51:20

சீனாவின் 31 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்கள் அண்மையில் அடுத்தடுத்து முதல் காலாண்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கியக் குறியீடுகளை வெளியிட்டுள்ளன.

பல்வேறு இடங்களின் மொத்த பொருளாதார மதிப்புகளைப் பார்த்தால், வேறுபட்ட அளிவிலான அதிகரிப்புடன், 11 மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இத்தகைய பகுதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இருந்ததை விட 3 அதிகம். அவற்றின் மொத்த பொருளாதார மதிப்பு 18 லட்சம் கோடி யுவானை நெருங்கி, தேசிய பொருளாதார மதிப்பில் சுமார் 65 விழுக்காடு வகித்துள்ளது.

வளர்ச்சி வேகத்தைப் பார்த்தால், கோவிட்-19 நோய் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜிலின் மாநிலத்தைத் தவிர்த்து, இதர பகுதிகள் நேர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளன. இவற்றில், சின்ஜியாங், ஹுபெய், திபெத், ஹாய்நான் உள்ளிட்ட பகுதிகளின் வளர்ச்சி வேகம் 6 விழுக்காட்டுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழ்நிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை சீனாவின் பல்வேறு இடங்கள் முனைப்புடன் சமாளித்து, பொருளாதாரத்தின் சீரான துவக்கத்தைக் கண்டுள்ளதை புள்ளியியல் ஆய்வு காட்டுகின்றது.