ஜெர்மனி-இந்திய தலைமை அமைச்சர்கள் சந்திப்பு
2022-05-04 15:59:59

ஜெர்மனி தலைமை அமைச்சர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அந்நாட்டில் பயணம் மேற்கொண்ட இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் 2ஆம் நாள் பெர்லினில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜுன் இறுதியில் நடைபெறும் ஜி7 அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள மோடிக்கு அவர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்ததோடு, ஜெர்மனியின் முக்கிய நெடுநோக்கு கூட்டாளிகளில் இந்தியா ஒன்றாகும் என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இருநாட்டு அரசுகளுக்கு இடையேயான 6ஆவது கலந்தாய்வுக்கு அவர்கள் தலைமை தாங்கி, பசுமை மற்றும் தொடரவல்ல எரியாற்றல் கூட்டுறவு உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.