சீனா மீதான கூடுதல் வரி வசூலிப்புக்கு அமெரிக்காவின் மீளாய்வு துவக்கம்
2022-05-04 16:02:55

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் 3ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், 4 ஆண்டுகளுக்கு முன் 301ஆவது விதியை அடிப்படையாகக் கொண்டு சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீது கூடுதல் வரி வசூலிப்பது தொடர்பான 2 நடவடிக்கைகள் முறையே ஜுலை 6 மற்றும் ஆகஸ்டு 23ஆம் நாள் முடிவுக்கு வரும். இனிமேல் இந்நடவடிக்கைகளுக்குச் சட்டப்படியான மீளாய்வு செய்முறையை மேற்கொள்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சீனா மீதான கூடுதல் வரி வசூலிப்பிலிருந்து நன்மை பெற்றுள்ள உள்நாட்டு தொழில்களின் பிரதிநிதிகளிடம் இக்கூடுதல் வரி நீக்கப்பட கூடும் என்ற தகவல் தெரிவிக்கப்படும். ஜுலை 5 மற்றும் ஆகஸ்டு 22ஆம் நாளுக்கு முன் இக்கூடுதல் வரியை நிலைநிறுத்த அவர்கள் விண்ணப்பம் செய்ய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் அமெரிக்க நிதித்துறை அமைச்சர் யேலன் கூறுகையில், சீனாவுடனான வர்த்தக நெடுநோக்கு பற்றி அமெரிக்க அரசு உணர்வுபூர்வமாக ஆய்வு செய்து வருகிறது. சீனா மீதான கூடுதல் வரி வசூலிப்பு நீக்கம் கருத்தில் கொள்ளத்தக்கது என்று தெரிவித்திருந்தார்.