அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை
2022-05-04 16:28:39

அமெரிக்காவின் குழந்தை மருத்துவக் கழகம் மற்றும் குழந்தை மருத்துவமனை சங்கம் அண்மையில் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, கரோனா வைரஸ் பரவியது முதல் இதுவரை, அமெரிக்காவில் சுமார் 1 கோடியே 30 லட்சம் குழந்தைகளுக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், கடந்த 4 வாரங்களில், அமெரிக்காவில் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 149 ஆயிரத்தைத் தாண்டியது. 2022ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.