உக்ரைன் விவகாரம்!புதின்-மக்ரோன் பேச்சுவார்த்தை
2022-05-04 17:01:12

ரஷிய அரசுத் தலைவர் புதின் 3ஆம் நாள் பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உக்ரைன் நிலைமை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

ரஷிய-உக்ரைன் பேச்சுவார்த்தை குறித்து ரஷியா இன்னும் திறந்த மனதுடன் இருக்கிறது என்று புதின் வலியுறுத்தினார்.

பிரான்ஸ் அரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட தகவலின் படி, உலக உணவுப் பாதுகாப்பு குறித்து மக்ரோன் கவனம் செலுத்துகின்றார்.

இது குறித்து புதின் கூறுகையில்,

ரஷியாவின் மீது மேலை நாடுகள் மேற்கொண்ட தடை நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்புப் பிரச்சினைக்கு முதல் காரணமாகும் என்றார்.

பல்வேறு நிலைகளில் தொடர்பு மேற்கொள்ள இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.