உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றி வரும் சீனப் பொருளாதாரம்
2022-05-05 19:41:39

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீஜியான் மே 5ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு எப்போதுமே ஆக்கப்பூர்வமான பங்கினை வழங்கி வருகிறது என்றார்.

உலகப் பொருளாதார அதிகரிப்பு மதிப்பீட்டு விகிதத்தை சர்வதேச நாணய நிதியம் அண்மையில் 3.6 விழுக்காடாகக் குறைத்தது. இது குறித்து அவர் கூறுகையில்,  கொந்தளிப்பான புவியமைவு அரசியல் மற்றும் கரோனா வைரஸ் பரவலால், உலகப் பொருளாதாரம் கடினமான நிலைமையில் உள்ளது. பொருளாதார மீட்சிக்கு, சர்வதேச சமூகத்தின் கூட்டு முயற்சிகள் தேவை. பல்வேறு தரப்புகளுடன் இணைந்து உலகப் பொருளாதார மீட்சியை முன்னேற்றுவதற்குப் பங்காற்றச் சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.