இந்தியாவில் வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்வு
2022-05-05 18:36:11

ம2018-க்குப் பிறகு முதன்முறையாக இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

மே 2 முதல் 4ஆம் நாள் வரை நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்தார்.

வட்டி விகித உயர்வுக்கு, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பணவீக்க உயர்வு, புவி-அரசியல் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக அளவில் சரக்குகள் பற்றாக்குறை ஆகியவையே காரணம். உலகளவில் நிலவும் கோதுமை பற்றாக்குறை உள்நாட்டில் கோதுமை விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக,  பணவீக்கம் உயர்விலேயே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.