இந்தியாவில் சேவை ஏற்றுமதி புதிய உச்சம்
2022-05-05 18:35:20

இந்தியாவில் 2021-22 நிதியாண்டில் சேவைத் துறைகளின் ஏற்றுமதி புதிய உச்சமாக 25 ஆயிரத்து 440 கோடி டாலரை எட்டியது. இது, முந்தைய நிதி ஆண்டை விட 23.4 விழுக்காடு அதிகம் என்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், தொலைத்தொடர்புகள், கணினி, தகவல் சேவைகள், பிற வணிகச் சேவைகள் மற்றும் போக்குவரத்து ஆகியவை சேவை ஏற்றுமதி உயர்வுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 67 ஆயிரத்து 620 கோடி டாலரை அடைந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று இவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.