கரோனா வைரஸ் திரிவுக்கு தடுப்பூசி பயனுள்ளது:WTO
2022-05-05 17:38:11

தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் புதிய கரோனா வைரஸின் புதிய திரிபுகள் காணப்பட்ட போதிலும், கடும் நோய் மற்றும் உயிரிழப்பைத் தடுப்பதற்கு கோவிட்-19 தடுப்பூசி இன்னும் பயனுள்ளதாக உள்ளது என்றும், பொது மக்கள் உரிய நேரத்தில் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு 4ஆம் நாள் தெரிவித்தது.

ஒமைக்ரானின் துணை வகை திரிபுகளின் பாதிப்பால், அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், தடுப்பூசி செலுத்துவது, கடும் நோய் மற்றும் உயிரிழப்பைத் தடுப்பதற்கு பயனளிக்கும் என்பதை ஆரம்பக் கால தரவுகள் காட்டுகின்றன என்று இவ்வமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், இவ்வமைப்பின் அவசரத் திட்டத்துக்கான தொழில் நுட்பப் பொறுப்பாளர் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு தொடர்புடைய ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆலோசனை வழங்கத் துணைபுரியும் விதம், பல்வேறு நாடுகள் புதிய ரக கரோனா வைரஸ் மீதான கண்காணிப்பு மற்றும் சோதனையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.