கல்லீரல் அழற்சி: உலகளவில் 228 குழந்தைகள் பாதிப்பு
2022-05-05 15:27:55

உலக அளவில் 20 நாடுகளைச் சேர்ந்த 228 குழந்தைகளுக்கு மே1ஆம் நாள் வரை கல்லீரல் அழற்சி ஏற்பட்டுள்ளது. எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட சுமார் 50 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தாரிக் யாசரேவிக் 3ஆம் நாள் தெரிவித்தார். இப்பாதிப்பு, முக்கியமாக ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆசியா, அமெரிக்கா மற்றும் ஓசியானியாவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது  என்றும் யாசரேவிக் கூறினார்.