சீனாவில் வாசிப்புக் கோளாறு உள்ளவருக்குப் பயனளிக்கும் உடன்படிக்கை அமலாக்கம்
2022-05-05 16:28:04

வெளியிடப்பட்ட படைப்புகளைப் பெறுவதில் விழிப்புலனற்றவர்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் இதர வாசிப்புக் கோளாறு உள்ளவர்களுக்கு வசதியளிக்கும் மராகேஷ் உடன்படிக்கையில் இணைந்த 85ஆவது நாடாக, சீனாவில் மே 5ஆம் நாள் இவ்வுடன்படிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது.

உலகளவில் பதிப்புரிமைத் துறையில் மனித உரிமைகள் தொடர்பான ஒரேயொரு உடன்படிக்கையாக, கோளாறு உள்ளவர்கள் பதிப்புரிமை கொண்ட படைப்புகளைப் பெறுவதற்கான தடைகளை நீக்குவது இதன் நோக்கமாகும்.

வாசிப்புக் கோளாறு உள்ளவர்கள் சமநிலையில் படைப்புகளைப் பெற்று மகிழ்வது, கல்வி பெறுவது ஆகிய உரிமைகளை உத்தரவாதம் செய்வதற்கு சீனா பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. மராகேஷ் உடன்படிக்கை சீனாவில் நடைமுறைக்கு வந்த பிறகு, வாசிப்புக் கோளாறு உள்ளவர்களின் ஆன்மீக பண்பாட்டு வாழ்க்கை செழுமையாக்கப்பட்டு, அவர்களின் கல்வி நிலையும் உயர்த்தப்படும் என்று சீனத் தேசிய பதிப்புரிமை நிர்வாகத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார்.