சீனாவின் ஜீலின்-1 குவான்ஃபூ-01C செயற்கைக்கோள் ஏவப்பட்டது
2022-05-05 16:14:01

சீனாவின் ஜீலின்-1 குவான்ஃபூ-01சி என்னும் செயற்கைக்கோள் உள்ளிட்ட 8 செயற்கைக்கோள்கள் லாங்மார்ச்-2டி ஏவூர்தியின் மூலம் தையுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து 5ஆம் நாள் காலை 10:38 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

நிலம் மற்றும் மூலவளம், கனிம அகழ்வு, பொலிவுறு நகரக் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஜீலின்-1 குவான்ஃபூ-01சி செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.