வட்டி விகித உயர்வு அறிவிப்பு:அமெரிக்க பெடரல் ரிசர்வ்
2022-05-05 15:30:37

அமெரிக்காவில் வட்டி விகிதத்தை, 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 0.75 முதல் 1 விழுக்காடு வரை உயர்த்துவதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 4ஆம் நாள் அறிவித்தது. 2000ஆம் ஆண்டுப் பிறகு, வட்டி விகிதம் முதன்முறையாக 50 அடிப்படைப் புள்ளிகளுடன் உயர்த்தப்பட்டது. அமெரிக்க பெட்ரல் ரிசர்வ் வங்கி நாணய கொள்கையை இறுக்குவது அவசியமானதை இது காட்டுகிறது.