அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து சீனாவின் எதிர்ப்பு
2022-05-05 18:55:51

போலியான தகவல்களை ரஷியா பரப்பியதற்கு சீனா துணை புரிந்தது என்ற அமெரிக்காவின் செய்தியை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சாவ் லிச்சியன் 5ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மறுத்தார்.

அவர் கூறுகையில்,

அமெரிக்காவின் தொடர்புடைய செய்திதான் போலியானது. போலியான தகவல்களை உருவாக்கிய மிக பெரிய நாடு அமெரிக்கா என்பதை இது வெளிகாட்டுகிறது என்றார்.