சீனாவில் லிஷியா சூரிய பருவம்
2022-05-05 16:12:11

சீனப் பாரம்பரிய நாட்காட்டியின்படி, மே 5ஆம் நாள் லிஷியா என்னும் சூரிய பருவமாகும். கோடைக்காலத்தின் முதலாவது சூரிய பருவம் இதுவாகும். சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தோர் இச்சூரிய பருவத்தில் பாரம்பரிய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து புதிய பருவத்தை வரவேற்பர். இத்தகைய நிகழ்வுகளின் மூலம், மக்கள் கோடைக்காலத்தை வரவேற்பதுடன், அமோக விளைச்சல் மற்றும் நோய் இல்லா வாழ்வு ஆகியவற்றின் மீதான தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவர்.