சீனாவில் ஊரகப் பகுதிகளில் மின்னாற்றல் வாகனங்களுக்கு வரவேற்பு
2022-05-06 16:37:18

சீனாவின் கிராமப்புறங்களில் மின்னாற்றல் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அப்பகுதிகளில் விற்கப்படும் மின் வாகனங்களின் விலை பொதுவாக 30-80 ஆயிரம் யுவான் என்ற அளவில் உள்ளது.

அத்துடன், மின் வாகனத்தின் மூலம் 100 கிலோமீட்டர் பயணத்துக்கு வெறும் 10 யுவான் மட்டுமே போதும். குறைவான செலவினத்தில் இயங்கும் இத்தகைய பசுமையான வாகனங்களை விவசாயிகள் விரும்பி வாங்குகின்றனர்.

கிராமப் பகுதிகள் மற்றும் தொலைவில் உள்ள பகுதிகளில் மின் வாகனங்களின் விற்பனையைத் தூண்டும் விதம், மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வரும் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கடந்த ஆண்டில்  சீனாவின் கிராமப் பகுதிகளில் விற்பனையான மின் வாகனங்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 68 ஆயிரத்தை எட்டியது. இது, 2020ஐக் காட்டிலும் 1.7 மடங்கு அதிகம். இவ்வாண்டிலும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.