முதல் காலாண்டில் சீனச் சேவைத் துறையின் ஏற்றுமதி
2022-05-06 16:39:18

சீன வணிக அமைச்சகம் 5ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் சேவை வர்த்தகம் விரைவாக வளர்ந்து வந்துள்ளது. இத்துறையின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 1 லட்சத்து 45 ஆயிரத்து 699 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 25.8 விழுக்காடு அதிகரித்தது. இதில் ஏற்றுமதித் தொகை 30.8 விழுக்காட்டு அதிகரிப்புடன் 71 ஆயிரத்து 398 கோடி யுவானையும், இறக்குமதித் தொகை 21.3 விழுக்காட்டு அதிகரிப்புடன் 74 ஆயிரத்து 301 கோடி யுவானையும் எட்டியுள்ளன.

இவ்வமைச்சகத்தின் சேவை வர்த்தகப் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், முதல் காலாண்டில் அறிவு செறிவான சேவை வர்த்தகம் சீராக வளர்ந்து வந்துள்ளது. அதோடு, சுற்றுலா சேவைத் துறையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஓரளவு மீட்சி அடைந்துள்ளது என்றார்.