கடுமையாகச் சரிந்த அமெரிக்க பங்குச் சந்தை
2022-05-06 14:43:14

உள்ளூர் நேரப்படி மே திங்கள் 5ஆம் நாள், நியூயார்க்கில் உள்ள மூன்று முக்கிய அமெரிக்க பங்கு குறியீடுகள் கடுமையாகச் சரிந்தன.

பங்கு வர்த்தகத்தின் முடிவில், டோ ஜொன்ஸ் பங்கு குறியீட்டு எண் 3.12 விழுக்காடு குறைந்து, 32,997.97 புள்ளிகளாக இருந்தது. ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனத்தைச் சேர்ந்த 500 வகைகளின் பங்கு குறியீட்டு எண் 3.56 விழுக்காடு சரிந்து 4,146.87 ஆக இருந்தது. நாஸ்டாக் ஒட்டுமொத்த குறியீட்டு எண், 4.99 விழுக்காடு குறைந்து, 12,317.69 ஆக இருந்தது. இதைத் தவிர, 10 ஆண்டுகால அமெரிக்க அரசு கடன் வருமானம், 3.066 விழுக்காடாக உயர்ந்தது.