கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் பெரும் தோல்வி அடைந்த அமெரிக்கா
2022-05-06 20:58:53

அமெரிக்காவின் என்பிசி ஒலிப்பரப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மே 4ஆம் நாள் வரை, அமெரிக்காவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது. அவர்களில் 50 விழுக்காட்டவர்கள், அமெரிக்காவின் நடப்பு அரசு பதவி ஏற்ற பிறகு உயிரிழந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தின் ஒரே ஒரு மேல்நிலை வல்லரசான அமெரிக்கா, கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பில் மிகப் பெரும் தோல்வி அடைந்த நாடாக உள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகள் தன்னலம் மற்றும்  மேலாதிக்கப்போக்கு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மக்களின் உயிர்கள் மற்றும் மனித உரிமையை அலட்சியம் செய்ததுதான் அதற்கான காரணமாகும்.