உக்ரைன் பிரச்சினையில் யார் போலி செய்தியை உருவாக்கியது?
2022-05-06 15:38:00

உக்ரைன் பிரச்சினை தொடர்பாக ரஷியா வெளியிட்ட போலி தகவலகளை சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரும் ஊடகங்களும் அதிகமாகப் பரப்பி,  உக்ரைனில் ரஷியா மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையை நியாயமாக இருக்கச் செய்வதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறை கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிக்கையை விரிவாக படித்தால், இதில் நிறைய போலி தகவல்கள் இருப்பதைக் கண்டறிய முடியும்.

குறிப்பாக, அமெரிக்கா உக்ரைனில் உயிரியல் ஆய்வகத்தை நிறுவியது பற்றி ரஷியா வெளியிட்ட தகவல் சீனாவினால் மேலும் பரவியதை அமெரிக்கா இவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டியது. உண்மையில், உக்ரைனில் உயிரியல் ஆய்வகத்தை நிறுவியதை அமெரிக்கா முன்னதாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறது.

2011ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் உயிரி ஆயுதங்களைத் தடை செய்யும் பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நாடுகளின் மாநாட்டுக்கு அமெரிக்கா வழங்கிய பணியறிக்கையில், அமெரிக்கா உக்ரைனில் 26 உயிரியல் ஆய்வகங்களை நிறுவியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் திங்கள், அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உக்ரைனில் ஒத்துழைப்புத் தன்மையுடைய 46 நிறுவனங்களை அமெரிக்கா கொண்டுள்ளதாக கூறியது. இந்த தகவல்கள் போலியானதா?

உக்ரைன் பிரச்சினையில் சீனா தொடர்பான அமெரிக்காவின் தவறான கருத்துக்களை எதிர்க்க, 15ஆயிரம் எழுத்துக்களைக் கொண்ட கட்டுரை ஒன்றை சீன ஊடகங்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ளன. இதில், உறுதியான உண்மைகளையும் விரிவான தரவுகளையும் பயன்படுத்தி, அமெரிக்காவின் தவறான கருத்துக்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. இதில் யார் போலி செய்தியை உருவாக்கியது பற்றி அறிந்து கொள்ள முடியும்.