அர்ஜென்டீனாவில் அறியப்படாத காரணத்தால் ஏற்படுகின்ற குழந்தை ஹெபடைடிஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது!
2022-05-06 16:39:22

அர்ஜென்டீனா சுகாதார அமைச்சகம் உள்ளூர் நேரப்படி மே திங்கள் 5ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, மே திங்கள் முதல், அந்நாட்டில் அறியப்படாத காரணத்தால் ஏற்படுகின்ற குழந்தை ஹெபடைடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டோரின் 8 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

நோயாளிகளைப் பற்றிய பின்தொடர் ஆய்வுகளை நடத்துவதற்காக ஒரு சிறப்புப் பணிக்குழுவை உருவாக்க பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களை அர்ஜென்டீனா சுகாதார அமைச்சகம் அழைத்துள்ளது.

மே முதல் நாள் வரை, 20 நாடுகளில் இருந்து குழந்தைப் பருவத்தில் அறியப்படாத காரணத்தால் ஏற்படுகின்ற குறைந்தது 228  ஹெபடைடிஸ் நோய் வழக்குகள் பதிவாகியுள்ளன என்று உலகச் சுகாதார அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜசரேவிக் 3ஆம் நாள் தெரிவித்தார்.