ஓய்வு நிலையில் இருக்கும் சீனாவின் செவ்வாய் ஆய்வு ஊர்தி
2022-05-06 18:24:16

சீன தேசிய விண்வெளி பணியகத்தின் சந்திரன் ஆய்வு மற்றும் விண்வெளித் திட்டப்பணி மையம் அண்மையில் வெளியிட்ட தகவலின் படி, சீனாவின் சு ரொங் என்ற செவ்வாய் ஆய்வு ஊர்தி இருக்கும் பகுதியில், குளிர்காலம் வந்துள்ளதால் குளிர்கால ஓய்வு நிலைக்கு இவ்வூர்தி  ஆயத்தம் செய்து வருகின்றது.

மே 5ஆம் நாள் வரை, இவ்வூர்தி செவ்வாய்க் கிரகத்தில் 347 செவ்வாய் நாட்கள் ஆய்வுப் பணி மேற்கொண்டுள்ளது. மொத்தம் 1921 மீட்டர் தொலைவு பயணித்துள்ளது. அதேவேளை, இவ்வூர்தியுடன் இணைந்து செவ்வாய்க் கிரகத்தை அடைந்து அதனைச் சுற்றி வரும் டியன் வென்-1 என்ற கலம் பூமிக்கு 24 கோடி கிலோமீட்டர் தொலைவிலான பாதையில் 651 நாட்களாக இயங்கி வருகின்றது. இப்போது இந்த இரு கருவிகள் 940 ஜிபி தகவல்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.