சில ஜப்பானிய அரசியல்வாதிகளின் உண்மை நோக்கம்
2022-05-07 20:05:42

இவ்வாண்டு, ஜப்பானின் அமைதி அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, வெளியிடப்பட்ட இச்சட்டத்தின் 9ஆவது விதியில், போர் தொடுப்பதையும் ஆயுத ஆற்றல் மூலம் சர்வதேச தகராறுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறையையும் ஜப்பான் என்றுமே கைவிடுகின்றது. இந்த நோக்கத்திற்காக, தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் பிற போர் சக்தியை ஜப்பான் வைத்திருக்காது என்று தெளிவாக கூறப்பட்டது.

கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி தேக்க நிலைக்குள் நுழைந்தது.

வெளிப்புற சர்ச்சையில் ஈடுபடுவது மற்றும் சர்வதேசப் போர்களில் பங்கேற்பதன் மூலம், உள்நாட்டு முரண்பாடுகளைத் தீர்க்க ஜப்பான் அரசு முயன்றது.

ஒருபுறம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டிருந்தது. மறுபுறம், சர்வதேசப் போர்களில் பங்கேற்க இராணுவ செலவுகள் அதிகரித்துக் கொண்டிருந்தது.

ஆசிய அண்டை நாடுகளையும் ஏன் உலகத்தையும் பொறுத்த வரை, அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தும் சில ஜப்பானிய அரசியல்வாதிகளின் முயற்சிகள், "இராணுவவாதத்தின்" உண்மையான நோக்கத்தைக் காட்டுகின்றன.