கோவிட்-19 தடுப்பூசியின் 4வது டோஸை செலுத்திக்கொள்ளும் நடவடிக்கையை இலங்கை தொடங்கியது!
2022-05-07 17:30:19

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை வழங்க சுகாதார அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமண வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்.

இலங்கை சுகாதார அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொடர்பான நிபுணர் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜெயசுமண தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது வரை 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

70 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இலங்கையில் இதுவரை 6,63,503 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 16,507 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.