அசுவ்ஸ்டோல் இரும்புருக்கு தொழிற்சாலையிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற்றம்
2022-05-08 16:35:56

மே 5ஆம் நாள் முதல் இதுவரை, ஐ.நா மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன், அசுவ்ஸ்டோல் இரும்புருக்கு தொழிற்சாலையிலிருந்து 51 அப்பாவி மக்கள் வெளியேறியுள்ளனர். உக்ரைன் துணை அரசுத் தலைவர் வெரெஷ்ச்சுக் 7ஆம் நாள் கூறுகையில், மாரியுபோல் நகரிலுள்ள நடப்புக் கட்ட மனித நேய நடவடிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ரஷிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கொனஷென்கோவ் அதே நாள் கூறுகையில், ரஷிய படைகள், உக்ரைனிலுள்ள 18 ராணுவ இலக்குகளைத் தாக்கியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய படைச் சாதனங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.